• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு!

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவளைதலங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என்று பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை, உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி, பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இந்நிலையில் வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் என குற்றம்சாட்டியிருந்தார்.

    வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை, உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென்றும் மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் சமூக வலைதள பக்கங்களின் தரவுகளை கேட்டு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த ஓராண்டாக பயன்படுத்திய, சமூக வலைதள தரவுகளை தர வேண்டும் என சிபிசிஐடி கோரியுள்ளது. இந்த தரவுகள் கிடைத்த பிறகு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தரவுகள் 15 நாட்களில் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: