ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

6 ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

6 ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட தற்கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்தந்த நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக 17 வழக்குகள் பதிவாகின. அது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்ட தற்கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்தந்த நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CBCID, Online rummy