டிஜிபி மீதான பெண் எஸ்.பி.யின் பாலியல் புகார்: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்

மாதிரி படம்

பாலியல் புகாருக்கு ஆளான டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.

 • Share this:
  பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியிடம் நடத்தப்பட்ட விசாரணை உள்ளிட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

  பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒருவர் மீது டிஜிபி-யிடம் பெண் எஸ்.பி., புகார் அளித்தார். இதுகுறித்து விசாகா குழு விசாரணை நடத்திவரும் நிலையில், சிபிசிஐடி-யும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார், தங்களது முதல்கட்ட விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தனர்.

  பெண் எஸ்.பி.யை புகார் அளிக்கவிடாமல் தடுத்த எஸ்.பி., மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என்று மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

  மேலும் படிக்க...முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: