தமிழகத்திற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் காவிரியிலிருந்து 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

தமிழகத்திற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
காவிரி (கோப்புப்படம்)
  • Share this:
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை திறக்கு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் சார்பில் தமிழக பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு மாநிலங்களில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து, மழை விவரங்கள், மாநில அணைகளின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.


பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை திறக்கு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இதில் ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சியும், ஜூலைக்கு 31.24 டிஎம்சி நீரும் கர்நாடகா திறக்க வேண்டும்.

மேலும், மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

2019-20 நீர்ப்பாசன ஆண்டில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு 275 டிஎம்சி நீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் குடும்பத்துடன் மதுரை வந்த ரயில்வே உயர் அதிகாரியால் பரபரப்பு 
First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading