தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி

கே.ஆர்.எஸ். அணையில் விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 22, 2019, 8:43 AM IST
  • Share this:
கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் ஒகேனக்கல் வழியாக இன்று காலை தாமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஜூன் தொடக்கத்தில் தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி நீர் தர வேண்டிய நிலையில் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்தது. தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சரியாக பெய்யாததை காரணம் காட்டி முழுமையாக தண்ணீர் திறக்கவில்லை.


இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்தது. இதனால், அங்குள்ள கபினி அணைக்கான நீர் வரத்து 7,500 கன அடியாக அதிகரித்தது.

இதையடுத்து, தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட 2,000 கன அடி நீர், தற்போது 5,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததால் விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் 5,000 கன அடி நீர் காவிரி நதியில் தமிழகத்திற்கும், 2, 500 கன அடி நீர் கால்வாய் மூலமாக கர்நாடக விவசாயிகளுக்கும் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 10,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதன் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

மேலும் படிக்க... வேண்டாம் என்று பெயரிடப்பட்ட பெண்ணின் சாதனை





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading