திமுக தலைமையில் இன்று 3-வது முறையாக அனைத்து கட்சி கூட்டம்

news18
Updated: April 16, 2018, 10:09 AM IST
திமுக தலைமையில் இன்று 3-வது முறையாக அனைத்து கட்சி கூட்டம்
அண்ணா அறிவாலயம்
news18
Updated: April 16, 2018, 10:09 AM IST
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய  திமுக தலைமையில் இன்று மூன்றாவது முறையாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. மொத்தம் 9 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் கூட்ட அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பல்வேறு கட்சி தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு நடை பயணம் நடைபெற்றது. மேலும் ஏப்ரல் 12ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி, கர்ப்பு பலூன் பறக்க விட்டு  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில்  எதிர்கட்சி தலைவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனு அளிக்கப்பட்டது.

மே 3ம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை சமர்பிக்க மத்திய அர்சுக்கு உச்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு திட்டத்தை சமர்பிக்க கால தாமதம் ஏற்படுத்தும் என்பதால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்  அடுத்தகட்ட  போராட்டங்கள் நடத்துவது குறித்து இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்