ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் - ஆணையத் தலைவர் திட்டவட்டம்

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் - ஆணையத் தலைவர் திட்டவட்டம்

mekedatu dam

mekedatu dam

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர், ஒழுங்காற்றுத் தலைவர் நவீன்குமார் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட உடனிருந்தனர்.

இக்குழுவினருக்கு கல்லணையில் நுழையும்போது, கருப்புக்கொடி காட்டிய, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஆணையத் தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "மேகதாது அணை தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்து அதிகாரமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது.

எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தவறான கருத்து. இதுகுறித்து தமிழக அரசிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும்.

மேகதாது குறித்து விவாதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லும் தமிழ்நாடு அரசு தான் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

வரும், 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை. யாரும் எங்களை நிர்பதிக்க முடியாது. தமிழ்நாட்டில் காவிரி பாயும் பகுதிகள் எங்களின் அதிகார வரம்புக்குள் உள்ளது. அந்த பகுதிகளில் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேகதாது அணை விவகாரம் குறித்து சொலிசிடர் ஜெனரலிடமிருந்து சட்டரீதியான ஆலோசனை கேட்டு பெற்றுள்ளோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம்’ என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு மாதாந்திர நீர் தரப்படுகிறதா?" என்கிற கேள்விக்கு, "மழைப்பொழிவின் அடிப்படையில் தான் மாதாந்திர நீர் பங்கீடு தீர்மானிக்கப்படுகிறது" என்று பதிலளித்தார்.

மேலும் இதுகுறித்து திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி கூறுகையில், "தமிழ்நாடு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் மேட்டூர் அணைக்கு கடந்த மே மாதம் நீர் வந்து சேர்ந்தது.

இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்ட நீர் கிடையாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இதனை கணக்கில் கொள்ள முடியாது" என்றார்.

இ.பி.எஸ் சூழ்ச்சி செய்கிறார்: ஓ.பி.எஸ்தான் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் - நேரில் சந்தித்து தனியரசு ஆதரவு

ஆணையத் தலைவர் ஹல்தரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் ஜீவக்குமார், விசுவநாதன் ஆகியோர் நேரில் மனு கொடுத்து, மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களிடம், "மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம். அதை விவாதிக்க கூடாது என்று யாரும் சொல்லக் கூடாது" என்று விவசாய சங்க பிரதிநிதியிடம் ஹல்தர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Cauvery River, Mekedatu dam