Home /News /tamil-nadu /

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: 10 சிறப்பு அம்சங்கள்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: 10 சிறப்பு அம்சங்கள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 10 சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

    1. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    2. 2007ல் காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளது.

    3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி நீர் கிடைக்கும்.

    4. 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் சட்டவிரோதமானது அல்ல.

    5. கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றம் இல்லை.

    6. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

    7. எந்த தாமதமும் இன்றி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    8. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது.

    9. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.

    10. மாதாந்திர அடிப்படையில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அறிவிப்பு
    Published by:Veeramani Panneerselvam
    First published:

    Tags: Cauvery dispute, Cauvery verdict, Cauvery water sharing, Karnataka, Supreme court, Tamilnadu

    அடுத்த செய்தி