காவிரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

டெல்லியில் வரும் 8-ம் தேதி காவிரி நதி நீர் குறித்து ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

காவிரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
காவிரி
  • News18
  • Last Updated: August 2, 2019, 9:02 AM IST
  • Share this:
காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. 

காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டார். இதேபோல, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கான நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் காவிரி படுகையில் பெய்த மழை அளவு குறித்தும், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர் அளவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.


அப்போது, கடந்த 2 மாதங்களாக 40 விழுக்காட்டுக்கும் குறைவான மழை பெய்துள்ள போதிலும், 9.505 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக கர்நாடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4.43 டிஎம்சி திறக்கப்பட வேண்டிய நிலையில், மிகவும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்துள்ளதாக தமிழகம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, நீர்வரத்துக்கு ஏற்ப அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் வரும் 8-ம் தேதி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Also see... கொடைக்கானல் பூண்டுக்கு புவிசார் குறியீடு...!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading