முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நடப்படும்: முதலமைச்சர் பழனிசாமி உறுதி

தமிழகம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நடப்படும்: முதலமைச்சர் பழனிசாமி உறுதி

  • Last Updated :

    இந்தாண்டு இறுதிக்குள் தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி பனை விதைகள் நடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். அதன் மூலம் கடந்த செப்டம்பர் 3ம் தேதி தலை காவிரியில் இருந்து தொடங்கிய இவரது இருசக்கர வாகன பயணம் சென்னையை வந்தடைந்துள்ளது.

    இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது மேடையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை" குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாகவும், இதே போன்று தமிழகத்தில் உள்ள பிற நதிகளும் மாசுபடுவதில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு, பிரதமர் மோடியே ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

    Watch :

    top videos

      First published:

      Tags: Mission Paani, Sadhguru, Water Crisis