மூதாதையர் செய்த தொழிலான பிணம் எரிக்கும் வேலையை செய்ய வேண்டும் - கட்டட தொழிலாளிக்கு மிரட்டல்

மூதாதையர் செய்த தொழிலான பிணம் எரிக்கும் வேலையை செய்ய வேண்டும் - கட்டட தொழிலாளிக்கு மிரட்டல்
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 9:22 AM IST
  • Share this:
திருச்சியில் மூதாதையர்களின் பிணம் எரிக்கும் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் அருகே உத்தமர்சீலி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர், கட்டடத் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். அவர் தனது வீட்டருகே கழிப்பறை கட்ட முயற்சித்துள்ளார்.

இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் சிவமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


மேலும், பாலச்சந்திரன் மூதாதையர்கள் செய்த பிணம் எரிக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் ஊரை காலி செய்துவிட வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பாலச்சந்திரன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. அமல்ராஜை சந்தித்து மனு அளித்தார்.

 

Loading...

First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...