ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கத்தியை காட்டி லாரி கடத்தல் - முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது

கத்தியை காட்டி லாரி கடத்தல் - முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது

கடத்தப்பட்ட லாரி

கடத்தப்பட்ட லாரி

தூத்துக்குடியில் முந்திரி லாரியை கடத்திய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராசிபுரம் அருகே தூத்துக்குடியில் இருந்து கடத்தி வந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி சரக்குகளுடன் கூடிய லாரியை தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை இயங்கி வருகிறது. ஆலையில் இருந்து 8 டன் எடை கொண்ட 1.10 கோடி  மதிப்பிலான முந்திரி லோடு ஏற்றி ஜப்பான் நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி டிரைவர் ஹரி  கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை மடக்கி உள்ளனர். பின்னர் ஓட்டுநரிடம்  கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாலையில் மேலாளர் ஹரிகரனிடம் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த ஹரிகரன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.

  Also Read: சென்னை மழை வெள்ளத்தில் பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த மன்சூர் அலிகான்

  இதனை பெற்றுக் கொண்ட தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் லாரியை தீவிரமாக தேடி வந்தனர்.

  இந்தநிலையில் மர்ம கும்பல் லாரியில் உள்ள GPS கருவியை நீக்கிவிட்டு லாரியை  ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி செல்வதாக  தனிப்படையினர் அறிந்துள்ளனர். பின்னர் லாரியை காவல்துறையினர் பின்தொடர்வதை தெரிந்த மர்ம கும்பல்  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

  Also Read:  கோவையில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு - ரயில் ஓட்டுநர்களிடம் விசாரணை

   இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு  இடமாக சாலையில் நின்ற காரை  காவல்துறையினர்  விசாரித்தபோது கடத்தலில் ஈடுபட்ட முன்னாள்  அமைச்சர் செல்லபாண்டியன்  மகன் ஜெபசிங், உள்ளிட்ட 7 பேரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார் மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான காவல்துறையினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cashew Nuts, Crime News, Police, Robbery, Tamil News