விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு

  • Share this:
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டாசுகளை வெடிக்க காலை 6 மணிமுதல் 7 மணிவரையும், இரவில் 7 மணிமுதல் 8 மணி வரையிலும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதியளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னையில் விதிகளை மீறியதாக 115 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 26 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 318 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டத்தில் 99 வழக்குகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 67 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Published by:Yuvaraj V
First published: