Home /News /tamil-nadu /

கல்லூரியில் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து

கல்லூரியில் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து

கல்லூரியில் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தமால் நேரடியாக நடத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டுமென்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின் செயலாளர் கார்த்திகேயன், தேர்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் உடன் மாணவர் அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்த்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி, சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒரு வழக்கு என தமிழகம் மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மாணவர்கள் எதிர்கால நலன் கருத்தி முதல்வர் 12 மாணவர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை கைவிட உத்தரவிட்டதின் பேரில் மேற்படி அனைத்து வழக்குகளும் தமிழக காவல் துறையினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, Minister Ponmudi

    அடுத்த செய்தி