ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு அனுப்ப கோரும் வழக்கு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு அனுப்ப கோரும் வழக்கு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
எச்.ராஜா
  • Advertorial
  • Last Updated: March 22, 2018, 12:57 PM IST
  • Share this:
ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கமளிக்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் தொடர்ந்த வழக்கு  இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைரமுத்து மற்றும் பெரியார் குறித்து ஹெச்.ராஜா தெரிவிக்கும் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையிலும் இருந்தாலும் அவர் மீது கட்சி தலைமை எந்த நடவடிக்கையிம் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனநோயாளி போல பேசிவரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, ஹெச். ராஜா மீது மனுதாரர் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 28 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க அம்பத்தூர் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
First published: March 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்