ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு - இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு - இன்று விசாரணை

ஒ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஒ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ADMK : அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்.சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,  2017 ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும்,  அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரியுள்ளார்.

இந்த மனுவை கடந்த முறை  விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி எஸ்.பிரியா விசாரித்தார்.

Must Read : ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருடன் சேர்த்து கணவனையும் கைது செய்த போலீஸ்

அப்போது, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Published by:Suresh V
First published:

Tags: ADMK, Court Case, EPS, OPS