Home /News /tamil-nadu /

நீதிமன்ற பணிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு... நீதிபதி எச்சரிக்கை

நீதிமன்ற பணிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு... நீதிபதி எச்சரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் மாவட்ட நீதித்துறைகளில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
மாவட்ட நீதிமன்ற பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட நீதித்துறைகளில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கர்நாடகாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், 2 ஆயிரம் பதவிகளுக்கான தேர்வில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது மற்றும் கட் ஆப் மதிப்பெண்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள போதும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து 8 மாதங்களுக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைமுறைகள் முடிந்து பணி நியமனங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

Also read... கனிம வளக் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியினராக இருந்தால் அந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

மேலும், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் இதே மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Also read... ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் சோதனை நடத்தியதற்கு பார் கவுன்சில் கண்டனம்!

இதையடுத்து, வழக்கு வாபஸ் பெறப்பட்ட விஷயத்தை மறைத்து இந்த புதிய வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரருக்கு, அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மனுதாரரிடம் விளக்கம் கேட்ட அவர் தரப்பு வழக்கறிஞர், வெற்று காகிதத்தில் தான் கையெழுத்திட்டதாகவும், உயர் நீதிமன்ற பணியிடங்கள் தொடர்பான வழக்குக்காக என கருதி கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தார். மேலும், எந்த உள்நோக்கமும் இல்லாததால் அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி