பள்ளிவாசலுக்குள் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர் - தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு.

பள்ளிவாசலுக்குள் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர் - தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு.

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரிக்க முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரிக்க முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற  செல்வம் போட்டியிடுகிறார். நேற்று இவர், மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட  சொக்கலிங்கபுரத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசலில் உள்ளே சென்று வாக்கு சேகரிக்க முயன்றார்.

இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை பள்ளிவாசலை விட்டு வெளியேற கூறி கோஷங்கள் எழுப்பியதை  தொடர்ந்து அங்கிருந்து அவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, தேர்தல் விதிமுறைகளை மீறி வழிபாட்டுத் தலத்தில் வாக்கு சேகரித்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலச்சந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்துறையினர் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... அரசியல்வாதிகளுக்கு குடும்பம் இடையூறாக இருக்கும்.. நிச்சயம் கமலுக்கு இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம் - நடிகை சுஹாசினிஉடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: