Home /News /tamil-nadu /

குடும்ப சண்டையால் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு... சொத்து பிரச்சனை பின்னணி என்ன?

குடும்ப சண்டையால் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு... சொத்து பிரச்சனை பின்னணி என்ன?

வைகுண்ட ராஜன்

வைகுண்ட ராஜன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறி கொடுக்கப்பட்ட புகாரில் பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜன் இவரது சகோதரர் ஜெகதீசன். இவர்களது சகோதரர்கள் ஆறுபேரை இயக்குநர்களாக கொண்டு செயல்பட்டு வந்ததுதான் வி.வி மினரல்ஸ் என்ற நிறுவனம். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்துதகராரில் கடந்த 2018 ஆம் ஆண்டு சகோதரர்கள் அனைவரின் ஒப்புதலோடு சொத்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சொத்துகள் பிரிக்கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி ஜெகதீசன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். ஓய்வுப்பெற்ற நிதிபதி மாலா என்பவர் சொத்துக்கான ரிசீவராக நியமிக்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கனகப்புரத்தில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடமும் சிறிய தொழிற்கூடமும் உள்ளது. இந்த இடம் ஜெகதீசனுக்கு சொந்தமாக இருந்தாலும் அதில் உள்ள பல கோடி மதிப்புள்ள இரும்பு இயந்திரங்கள் வைகுண்டராஜனுக்கு சொந்தமானவை என கூறப்படுகின்றது.

    இந்நிலையில் ஜெகதீசன் நிலத்தில் உள்ள தனக்கு சொந்தமான இரும்பு இயந்திரங்களை கடந்த 18 ஆம் தேதி எடுத்துச்செல்வதற்காக வைகுண்டராஜன் தனது ஊழியர்களுடன் சென்றுள்ளார். ஆனால் இயந்திரங்களை எடுத்து செல்லக்கூடாது என்று வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் தரப்பு ஆட்கள் அதற்கு தடையை எற்படுத்தியதாக தெரிகின்றது. இதனால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு தகராறு ஏற்பட்டுள்ளது.

    Also Read : குழந்தை டான்யாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு... போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

    அப்போது தடுத்துவைக்கப்பட்டிருந்த காரை வைகுண்டராஜன் ஆட்கள் அகற்றமுன்ற போது ஜெகதீசன் தரப்பில் இடத்தின் கண்காணிப்பாளராக இருந்த முத்துகிருஷ்ணன் காரின் குறுக்கே வந்துள்ளார். கார் மோதியலில் முத்துகிருஷ்ணனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகின்றது மேலும் காயமடைந்தவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

    இந்நிலையில் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரையடுத்து தொழிலதிபர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 26 பேர் மீது, அத்துமீறி நுழைதல் ,உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி தங்களுக்கு சொந்தமான இரும்பு இயந்திரங்களை எடுக்கச்சென்றதாகவும், எங்கள் மீது குற்றவழக்குப்பதிய வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே வாகனத்தின் குறுக்கே முத்துகிருஷ்ணன் வந்து விழுந்ததாகவும் வைகுண்டராஜன் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    அந்த இடத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இருந்த நிலையில், அவற்றில் ரூ.6 கோடி மதிப்பிலான இயந்திரங்களை ஜெகதீசன் தரப்பினர் விற்று விட்டனர். மீதமுள்ள இயந்திரங்களை காப்பதற்காக அந்த நிறுவன காவலாளியாக வடிவேலு என்பவரை வைகுண்டராஜன் நியமித்தார். மீதமுள்ள இயந்திரங்களையும் எடுப்பதற்காக 17-ம் தேதி சிலர் வரவே, அவர்களை தடுக்க முயன்ற காவலாளி வடிவேலுவை மிரட்டியுள்ளனர்.

    Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்

    காவலாளி வடிவேலு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வைகுண்டராஜனும் அவரது ஆட்களும் சென்று, தங்களுக்கு சொந்தமான இயந்திரங்களை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் ஜெகதீசன் தரப்பினர் இயந்திரங்களை எடுக்கவிடாமல் கார்களை குறுக்கே பேட்டதால், வைகுண்டராஜனின் ஆட்கள் அந்த காரை கைகளில் தள்ளிக்கொண்டு ஓரமாக விட முயன்றனர். அப்போது முத்துகிருஷ்ணன் என்பவர் வேண்டுமென்றே காரின் முன் விழுந்து அடிபட்டதுபோல நடிப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ பதிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வைகுண்டராஜன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சொத்திற்கு ரிசீவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்நிலையில் இல்லாமலும் எந்த முன்அறிவிப்பும் இல்லாமலும் வைகுண்டராஜன் தனது ஆட்களுடன் வந்த்தாகவும் அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்த்தாக ஜெகதீசன் தரப்பிலும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி