முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு!

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு!

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Last Updated :

நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்றிருந்த போது பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சென்ற அவரின் உதவியாளர், அங்கிருந்த ஒருவரால் எட்டி மிதிக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அந்த நபருக்கும், நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த நபர், தான் ஒரு தமிழர் எனவும், அன்றைய தினம் விஜய் சேதுபதியுடன் பேசியபோது அவர் இந்தியாவுக்கு எதிராக தாய்நாட்டை விமர்சித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக பேசியதாலும் நான் கண்டித்த போது விஜய் சேதுபதி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும், என்னை தாக்கியதால் தான் நான் அவர்களை பதிலுக்கு எட்டி உதைத்ததாகவும் வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்து யூடியூப் சேனல்களுக்கு விஜய் சேதுபதியின் உதவியாளரை தாக்கிய நபர் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, முத்துராமலிங்க தேவரை விமர்சித்த விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 07.11.21ஆம் தேதியன்று, இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதியை ‘தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்குப் பரிசு ரூ.1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே, இதுதொடர்பகா இன்று பி1 கடைவீதி காவல்நிலைய குற்ற எண்- 633/2021, U/s 504, 506 (i) IPCன் படி அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Arjun Sampath