• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு

எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீது மாநகராட்சி பணிள் தொடர்பான டெண்டரில் மேசாடி செய்ததாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுப்ட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவர் வீடு முன் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: