சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்: ஒரு வாரத்திற்குள் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்: ஒரு வாரத்திற்குள் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
மாதிரிப் படம்.
  • Share this:
சாதி மறுப்புத் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்த சக்தி தமிழினி என்பவரை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக, அவரது கணவர் கார்த்திகேயன் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இருவரும் ஒரு வாரத்தில் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும், அவருடன் வேலை பார்த்த சக்தி தமிழினி என்பவருக்கும் கடந்த 5ம் தேதி சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இவர்களின் காதல் திருமணத்திற்கு சக்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி வீட்டில் இருந்த கார்த்திகேயனையும் அவரின் தாயையும் தாக்கி சக்தியைக் கடத்திச் சென்றனர்.

சக்தியை மீட்டுத்தரக் கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், சக்தியின் தந்தை அடியாட்களைக் கொண்டு தன்னையும் தன் தாயையும் தாக்கி சக்தியைக் கடத்திச் சென்றதாகவும், தற்போது சக்திக்கு வேறு திருமணம் நடத்த பெற்றோர்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

Also see:
மேலும், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை உடனே மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக உத்தரவிட்டனர்.

நீதிமன்றம் செல்ல இருவருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், யாருடைய தலையீடும் இல்லாமல் இருவரிடம் தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading