• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம்

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம்

கருணாஸ்

கருணாஸ்

கருணாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேவர் பேரவை நிர்வாகியின் காரை தாக்கிய வழக்கில், கருணாஸை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின் போது, மற்றொரு கோஷ்டி மீது தாக்குதல் நடத்தியதாக கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸூக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

    நெல்லை மாவட்டம் பூலித்தேவர் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. கடந்த 2017- ம் ஆண்டு நடைபெற்ற பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில், பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில தலைவர் முத்தையா தலைமையில் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது வாகனம் நிறுத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு முத்தையாவின் வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு தப்பித்து சென்றனர். இதனால் கோபமடைந்த அவர், நெல்லை மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் 1-9-2017 அன்று கருணாஸ் மீது புகார் அளித்தார். அதன்பிறகு கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சம்பவம் நடந்தபோது நான் அந்த  இடத்தில் இல்லை என கருணாஸ் மனு தாக்ககல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் கிடைத்துள்ளது என்றும் அதனால் இந்த வழக்கை ரத்து செய்யும் படி கோரிக்கையும் விடுத்திருந்தார்.

    இந்த மனு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் வழங்கியுள்ளது என்பதற்காக வழக்கினை ரத்து செய்ய முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கு குறித்து இன்னும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடவில்லை. அதனால் இன்னும் 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ALSO READ... 

    நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் விளக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: