ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய வழக்கு.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய வழக்கு.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

மாதிரி படம்

மாதிரி படம்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கர்நாடக மாநிலத்தில் நந்தி நந்தி துருகம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடக மாநிலத்தில் 56 கிலோ மீட்டர், ஆந்திர மாநிலத்தில் 36 கிலோமீட்டர் கடந்து தமிழகத்தில் 222 கிலோமீட்டர் பாய்ந்து சதுரங்கப்பட்டினத்தில் உள்ள வங்காள கடலில் கலக்கிறது.. தமிழகத்தில் அதிக தொலைவு பயணிக்கும் பாலாறு நீரை ஆந்திரா அரசு பல்வேறு இடங்களில் 22 தடுப்பணைகளை கட்டி அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்துகிறது.

  இதையும் படிங்க | தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இருப்பது வெட்கக்கேடானது – ஆளுநர் ஆர்.என். ரவி

  கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பம் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசும்போது பாலாற்றின் குறுக்கே அங்கங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை உயர்த்த ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திர அரசு இத்தகைய நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது அது மட்டுமின்றி குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைக்கவில்லை எந்த பணிகளும் செயல்படக்கூடாது யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் அணை கட்ட கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது.

  கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது மீறினால் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படும். அதே நேரத்தில் தமிழக அரசு மாநில உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

  ஆந்திரா தமிழகத்திற்கு இடைக்கால பாலார் நீர் அபகரிப்பு மற்றும் திறனை தடுப்பணை குறித்து வழக்கு எண் ஓ எஸ் நம்பர் 2/ 2006 என்ற வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சிங்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

  எனவே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய அறிவிப்பை எதிர்த்து நீர் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

  செய்தியாளர்: வெங்கடேசன், திருப்பத்தூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Palar River