மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மூக்கணாங்கயிறு

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.

 • Share this:
  மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. இதற்கு அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  இந்த வழக்கு விசாரணையின் போது, மாடுகளின் மூக்கு சதையில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுவதால் அவை துன்புறுத்தப் படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  Must Read : எந்த மொழியில் கடிதம் அனுப்பப் படுகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

  சென்னை உயர்நீதிமன்றம்


  அப்போது உலகளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறைதான் பின்பற்றப் படுவதாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டும் வழக்கை தள்ளிவைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: