முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரின் பேரில் சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரின் பேரில் சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு!


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரின் பேரில் சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரின் பேரில் சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு!

சசிகலாவின் தூண்டுதலின் பேரில் என்னையும், என் குடும்பத்தையும் தொலைத்து விடுவதாக 500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகக்கூறி, புகார் அளித்திருந்தார்.

  • Last Updated :

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரின் பேரில் சசிகலா உட்பட 500 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் ரோசனை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கருவாடு மீன் ஆகலாம் ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுகவின் உறுப்பினர் ஆக முடியாது என சசிகலா குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனை தொடர்ந்து 9ஆம் தேதி ரோசனை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்த சி.வி.சண்முகம் சசிகலாவின் தூண்டுதலின் பேரில் என்னையும், என் குடும்பத்தையும் தொலைத்து விடுவதாக 500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகக்கூறி, சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

சி.வி.சண்முகத்தின் புகாரின் அடிப்படையில் இன்று ரோசனை காவல்துறையினர் சசிகலா உள்பட அடையாளம் தெரியாத 500 நபர்கள் மீது 501(1),507, 109,67 IT என நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் புகாரின் பேரில் சசிகலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் - குணாநிதி

    First published:

    Tags: CV Shanmugam, Sasikala