Home /News /tamil-nadu /

நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு

நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு

உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை

கடந்த 45 ஆண்டுகளாக மானாமதுரை நகராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தை  சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது.  இது ஏற்புடையதல்ல. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மானாமதுரை நகராட்சி தலைவர் பதவியை  பட்டியலினத்தை  சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசானையை  ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  மனுவில் சிவகங்கை மாவட்டத்தில்  மானாமதுரை  நகராட்சி உள்ளது.  இந்த நகராட்சியில்  3 லட்சம் மக்கள்  உள்ளனர் .  இங்கு பெரும்பாலும்  பிள்ளைமார் , முக்குலத்தோர் மற்றும் இஸ்லாமியர்கள்,  கிருத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17/ 01/22 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  வெளியிட்ட அரசாணையில்   மானாமதுரை  நகராட்சித் தலைவர் பதவி , பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளாக மானாமதுரை நகராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தை  சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது.  இது ஏற்புடையதல்ல.

எனவே மானாமதுரை நகராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தை  சேர்ந்தவர்களுக்கு ஒதுக் கி வெளியிட்ட அறிப்பானையை   ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.  மேலும்,  மானாமதுரை  மாநகராட்சித் தலைவர் பதவியை பொதுபிரிவினர் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்ய  உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் கைதான முன்னாள் முதல்வர் உதவியாளரின் ஜாமின் மனு தள்ளுபடி!


இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, மற்றும்  ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பில் நீதிமன்றம் தலையிட இயலாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் , மாநில தேர்தல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Published by:Murugesh M
First published:

Tags: HighCourt, Local Body Election 2022, Madurai High Court

அடுத்த செய்தி