• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புகார் அளிக்க சென்ற திருநங்கைக்கு பாலியல் தொல்லை: காவலர் மீது வழக்குப் பதிவு

புகார் அளிக்க சென்ற திருநங்கைக்கு பாலியல் தொல்லை: காவலர் மீது வழக்குப் பதிவு

காவலர் மூவேந்தன் வேல்பாரி

காவலர் மூவேந்தன் வேல்பாரி

விசாரணைக்கு வந்த காவலர் மூவேந்தன் வேல்பாரி குடிபோதையில் இருந்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசியதுடன் பாலியல் தொல்லை அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Share this:
    கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் செல்போன் காணவில்லை என புகார் அளித்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக காவலர் மீது பந்தயசாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கை உமாஸ்ரீ (30). இவர் தன்னுடைய செல்போன் தொலைந்து விட்டதாக பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்
    புகார் அளித்த திருநங்கை உமாஸ்ரீ இல்லத்திற்கு சென்ற காவலர் மூவேந்தன் வேல்பாரி விசாரணை மேற்கொண்டார்.

    விசரணையின்போது உமாஸ்ரீயிடம் காவலர் மூவேந்தன் அத்துமீறியதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் விசாரணைக்கு வந்த காவலர் மூவேந்தன் வேல்பாரி குடிபோதையில் இருந்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசியதுடன் பாலியல் தொல்லை அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீ பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட பந்தயசாலை காவல் நிலைய போலிசார் காவலர் மூவேந்தன் வேல்பாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கை புகாரில் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு: 2015ல் இருந்து என்ன செய்றீங்க... சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: