Home /News /tamil-nadu /

நீ என்ன ஜெயக்குமார் ஆளா எனக் கூறி அதிமுக தொண்டர் வாயில் குத்து.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

நீ என்ன ஜெயக்குமார் ஆளா எனக் கூறி அதிமுக தொண்டர் வாயில் குத்து.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

ADMK : சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறிய புகாரின் அடிப்படையில் ராயபேட்டை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தரப்பினர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள குறித்து ஆலோசனை செய்யவேண்டி இருந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அத்துடன், அவருடன் வந்த பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த நபர்கள் நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா என ஆபாசமான வார்த்தைகளால் பேசி வாயில் குத்தி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாரிமுத்து அவரது மகன் முகில் ராஜ் ஆகியோர் எறுக்கஞ்சேரியில் உள்ள KVT செந்தமிழ்பாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடித்து கடந்த 25 ஆம் தேதி ராயபேட்டை காவல் நிலையம் வந்த மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Must Read : 11ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது - ஓபிஎஸ்

அதன்படி, அதிமுகவை சேர்ந்த மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக கூடி கலகம் செய்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளிம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Jayakumar, OPS, Police case

அடுத்த செய்தி