• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா நிவாரண நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் - அதிமுக நிர்வாகி தொடர்ந்த தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

கொரோனா நிவாரண நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் - அதிமுக நிர்வாகி தொடர்ந்த தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

ரேஷன் கடை

ரேஷன் கடை

கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாயை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் 2,000 ரூபாயும், அடுத்த மாதம் 2,000 ரூபாயும் வழங்குவதற்கு ஆணையிட்டார். ரேஷன் கடைகளில் 2,000 ரூபாய் பணம் நேரடியாக வழங்கப்பட்டுவருகிறது.

    இந்தநிலையில், ‘இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் முந்தைய அ.தி.மு.க அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்க கூடாது எனவும், நியாய விலை கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் தி.மு.கவினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் கட்சியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

    ராதாபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு, திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள நியாய விலை கடைகளுக்கு தி.மு.க நிர்வாகிகளை பெருங்கூட்டமாக அழைத்துச் சென்று நிவாரண நிதி வழங்கியுள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று தி.மு.க சின்னம் கொடி பொறித்த பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் தி.மு.கவினரால் வைக்கப்பட்டிருந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரபட்டுள்ளது.

    மேலும் நிவாரண உதவியை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பையை வீடு வீடாக சென்று வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: