தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு!

தொகுதிக்குள் நுழைய முயன்ற வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு!
வசந்தகுமார்
  • News18
  • Last Updated: October 21, 2019, 9:12 PM IST
  • Share this:
தேர்தல் விதிகளை மீறியதாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்ரவாண்டி, நாங்குநேரி புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. விக்ரவாண்டி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியும், அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனும் போட்டியிடுகின்றனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் நுழைந்ததாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அநாவசியமாக கூட்டம் கூட்டுதல், சம்பந்தமில்லாத நபர் தொகுதிக்குள் நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


தொகுதிக்குள் நுழைய முயன்ற வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வசந்தகுமார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

Also see:

First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்