”அலிபாபாவும்... 40 திருடர்களும்...” என அரசு மீது விமர்சனம்... சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!

”அலிபாபாவும்... 40 திருடர்களும்...” என அரசு மீது விமர்சனம்... சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
  • News18
  • Last Updated: October 20, 2019, 3:17 PM IST
  • Share this:
தமிழக அரசு பற்றி அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஒருநபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

அதற்காக கடந்த 16-ம் தேதி தூத்துக்குடி வந்த சீமான், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அலிபாபாவும் 40 திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும் எனும்படி தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மாவும் இல்லை. ஆனால் 40 திருடர்கள் உள்ளனர்” என்று பேசியிருந்தார்.


சீமானின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு தமிழக அரசை விமர்சித்ததாகக் கூறி அதிமுக பிரமுகர் சுயம்பு என்பவர் புகார் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க: கொள்ளையன் முருகனின் ஹைடெக் வேன் சிக்கியது... வலையில் விழுந்த அந்த நடிகை யார்...?

வீடியோ பார்க்க: மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட இருவர் கைது!
First published: October 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading