மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு!

மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு!
மாரிதாஸ்
  • Share this:
மதங்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது திருநெல்வேலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லி நிசாமுதின் பகுதியில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பியுள்ளனர் என்பது போன்று பலரும் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். அதனையடுத்து, கொரோனா போன்ற உலகப் பேரிடர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது பழியைப் போடுவது தவறு என்று அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வலதுசாரி கருத்துகளை வீடியோ வாயிலாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மாரிதாஸ், கொரோனா தொற்று குறித்தும் பேசியிருந்தார். அந்த வீடியோ குறித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திருநெல்வேலி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.


அதில், ‘கொரோனா தொற்றையும் மேலப்பாளையம் பகுதியில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பேசியதற்காக மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், மாரிதாஸ் மீது மேலப்பாளையம் காவல்நிலையத்தில் 292ஏ, 295ஏ, 505(2), 67பி என்ற நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading