Home /News /tamil-nadu /

கோட்சே குறித்த விமர்சனம்! கமல்ஹாசன் மீது காவல்துறை வழக்குப் பதிவு

கோட்சே குறித்த விமர்சனம்! கமல்ஹாசன் மீது காவல்துறை வழக்குப் பதிவு

கமல்ஹாசன் (கோப்புப் படம்)

கமல்ஹாசன் (கோப்புப் படம்)

அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாதுராம் கோட்சே குறித்து பேசியதற்காக கமல்ஹாசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்று கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார்.

கமலின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்தநிலையில், கமல்ஹாசன் மீது கரூர் மாவட்டக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, கரூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அரவக்குறிச்சி, இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் 12-ம் தேதி இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என இந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாக உரையாற்றினார்.

இதுசம்மந்தமாக, கமலின் மீது, வந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

Published by:Karthick S
First published:

Tags: Kamal hassan

அடுத்த செய்தி