ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

CAA எதிர்ப்பு பேரணி - மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

CAA எதிர்ப்பு பேரணி - மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

  சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான பேரணி நேற்று நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள் உடபட 90-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். எழும்பூரில் தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது.

  முன்னதாக இந்தப் பேரணிக்கு தடைவிதிக்கவேண்டும் என்று வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், , ‘ஜனநாயக அமைப்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றைத் தடுக்க முடியாது. திமுக தலைமையில் நடக்கும் இந்த பேரணியில் சட்டம் ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தடையை மீறி தி.மு.க போராட்டம் செய்தால் அதனை வீடியோ பதிவு செய்யவேண்டும். பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் இரு மடங்காக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

  இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மீதும், பேரணியை தலைமையேற்று நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் காவல்துறையினர் சட்ட விரோதமாக கூடுதல்

  , போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் தடை மீறிய போராட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  மேலும் படிக்க: தந்தை பெரியாரின் 46-வது நினைவுதினம் - ட்ரெண்டிங்கில் முதலிடம்!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: DMK, M.K.Stalin