மாவட்ட ஆட்சியர் குறித்து அவதூறு? தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

மாவட்ட ஆட்சியர் குறித்து அவதூறு? தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
  • News18
  • Last Updated: November 20, 2019, 9:20 PM IST
  • Share this:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர் ராஜூ பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தி.மு.க எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெறாததுடன் அவர்களுக்கு அழைப்பும் அனுப்பப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி, இதன் பின்னணியில் ஆட்சியர் உமா மகேஸ்வரி இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவரை அ.தி.மு.கவோடு தொடர்புபடுத்தி அவதூறாக பேசியதாக மச்சுவாடியைச் சேர்ந்த திவான் என்பவர் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசு அதிகாரிகளை அவதூறாக பேசி பணிக்கு இடையூறு செய்தல், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Also see:

First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்