இணையத்தில் வெளியான வீடியோ: தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 428 கோடி ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதிக்குப்பட்ட காவல்நிலையத்தில் காவலர்களின் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக பணம் கொடுக்கப்பட்ட அதனை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.

  இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கே.என்.நேரு மீது அ.தி.மு.கவினர் குற்றம் சாட்டிவருகின்றனர். இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது கட்சியினருடன் தனிப்பட்ட முறையில் கே.என்.நேரு பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து அவர் பேசியிருந்தார். அதேபோல, சில கெட்டவார்த்தைகளையும் பேசியிருந்தார்.

  இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல்நிலையத்தில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கலாம் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: