சோழவந்தானில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா: வீடியோ ஆதாரத்துடன் திமுகவினர் புகார் - எம்.எல்.ஏ மாணிக்கம் மீது வழக்குபதிவு!

சோழவந்தானில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது  முறையாக அதிமுக வேட்பாளராக மாணிக்கம் போட்டியிடுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை சோழவந்தானில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு கொடுக்க திரண்டிருந்த பெண்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் அளித்த புகாரால் எம்.எல்.ஏ மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது  முறையாக அதிமுக வேட்பாளராக மாணிக்கம் போட்டியிடுகிறார். நேற்று அவர் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்க ஆரத்தி தட்டுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர்.

அதிமுகவினரின் பணப்பட்டுவாடா குறித்து வீடியோ ஆதாரங்களுடன் சோழவந்தான் தொகுதி திமுக தலைமை தேர்தல் முகவரும், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை செயலாளருமான கோகுல்நாத் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெஸ்டின் ஜெயபாலிடம் தேர்தல் விதிமுறை மீறி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்திட வேண்டுமென புகாரளித்தார்.

Also read... ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளது... புதுச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன? நீதிமன்றம் கேள்வி!

இதனையடுத்து சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி அப்துல் ரகுமான் சோழவந்தான் காவல் நிலையத்தில் பணப்பட்டு வாடா குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்தார்.
இத்தனை தொடர்ந்து, சோழவந்தான் போலீசார் அதிமுக வேட்பாளர் எம் எல் ஏ மாணிக்கம் மீது IPC (171) பணம் கொடுத்தல் குற்றத்திற்காக வழக்குபதிவு செய்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: