நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மன்சூர் அலிகான்

கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  நடிகர் மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

  இந்த புகார் தொடர்பாக வடபழனி காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  கொரோனா தடுப்பூசி குறித்தும் அரசுக்கு எதிராகவும் பொய்யான, அவதூறான தகவல்களை பரப்பியது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  Must Read :  வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு.. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

   

  நடிகர் விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: