ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு -செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ராகுல் காந்தி

ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யபட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் அளித்தார். உயிரிழந்த சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனை பல்வேறு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் பகிர்ந்துள்ளனர்.

  அதனையடுத்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் புகைப்படங்கள், அவரது உறவினரது புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது குற்றம் என்ற அடிப்படையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கின் மீது தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தது. அதனடிப்படையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரது ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  அந்த மனுவில், ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் (போக்சோ சட்டத்தின்) கீழ் ராகுல்காந்தி, மாணிக்தாகூர், கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் முகமதுரஸ்வி என்பவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த மனு நீதிபதி பிரவீனகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் முகமது ரஸ்வி தரப்பில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், நீலமேகம் ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
  Published by:Karthick S
  First published: