டோக்கன் விநியோகம்... சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

சுமார் 2 லட்சம் மக்களுக்கு  டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், டோக்கனில் பார்கோடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

news18
Updated: April 17, 2019, 2:55 PM IST
டோக்கன் விநியோகம்... சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு
மார்கண்டேயன்
news18
Updated: April 17, 2019, 2:55 PM IST
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜீ.வி. மார்கண்டேயன் வாக்களர்களுக்கு பணத்திற்காக டோக்கன் வழங்கியதாக வந்தப்புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

நேற்று முதல் தேர்தல் பறக்கும் படை பணப் பட்டுவாடாக்களைத் தடுக்க சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணங்களைப் பறிமுதலும் செய்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் வாக்களார்களுக்கு பணத்திற்காக டேக்கன் வழங்கியதாக புகார் வந்துள்ளது.புகாரை ஏற்று  விளாத்திகுளம் போலீசார் நடத்தியச் சோதனையில் சுமார் 2 லட்சம் மக்களுக்கு  டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், டோக்கனில் பார்கோடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு மருந்து கம்பெனியின் பார்கோடு என்று தெரிய வந்துள்ளது.

அதைத் தொடந்து  மார்கண்டேயன் உள்ளிட்ட 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...