Home /News /tamil-nadu /

எம்.பி.ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன தங்கத்தமிழ் செல்வன்!

எம்.பி.ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன தங்கத்தமிழ் செல்வன்!

தேர்தலின் போது நடத்திய முறைகேடுகளை மக்களுக்கு தெரிவிக்க இந்த வழக்கில் தாமாக முன் வந்து சாட்சியம் அளிப்பதாக தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது நடத்திய முறைகேடுகளை மக்களுக்கு தெரிவிக்க இந்த வழக்கில் தாமாக முன் வந்து சாட்சியம் அளிப்பதாக தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது நடத்திய முறைகேடுகளை மக்களுக்கு தெரிவிக்க இந்த வழக்கில் தாமாக முன் வந்து சாட்சியம் அளிப்பதாக தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில், அதே தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளரான மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், தேர்தலின் போது நடத்திய முறைகேடுகளை மக்களுக்கு தெரிவிக்க இந்த வழக்கில் தாமாக முன் வந்து சாட்சியம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

வேட்புமனுவில் சொத்துக்கள், கடன்களை மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், ஏற்கவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும், பணபட்டுவாடாவில் ஈடுபட்டது தொடர்பாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இதையும் படிங்க - 2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரது சாட்சியம் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் விசாரணை  ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது, கடன் தொடர்பான விவரங்களை மறைத்து ரவீந்திரநாத் மனுத்தாக்கல் செய்து, வெற்றி பெற்றுள்ளார் என்பதை தெரிவித்தோம். அன்றுள்ள அரசியல் சூழலால் வழக்கு தொடர முடியவில்லை என்றும்,  வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கில் பின்னர் நான் இணைந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

பின்னர் அவரது வழக்கறிஞர் அருண் அளித்த பேட்டியில், பொய்யான தேர்தல் வேட்பு மனு குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாகவும், மனுதாரர் மிலானி சாட்சியம் முடிந்த நிலையில் மற்றொரு வேட்பாளர் என்ற முறையில் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆஜராகி சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். ரவீந்திரநாத்திற்கு எதிரான மனு மீது அவர் பதவியில் இருக்கும்போதே நிச்சயம் முடிவு தெரிய வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, Thanga Tamilselvan, Theni

அடுத்த செய்தி