Home /News /tamil-nadu /

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் – தமிழக காவல்துறை விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் – தமிழக காவல்துறை விளக்கம்

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட 3 வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச்செயலாளர் பதவி : கனிமொழி உட்பட லிஸ்டில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்

இந்த வழக்குகள் சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி  தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு...

அப்போது, காவல்துறை தரப்பில், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், 3 வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குகளின்  இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Published by:Musthak
First published:

Tags: Senthil Balaji

அடுத்த செய்தி