டாஸ்மாக் திறப்புக்கு எதிராகப் போராடிய கே.எஸ். அழகிரி மீது வழக்குப் பதிவு!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

மதுக்கடையில் 2 நாட்களாக முண்டியடித்துக்கொண்டு நின்றவர்கள் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    மதுக்கடை திறப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக தன் மீது வழக்குப் பதியப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கொரோனா அச்சுற்றுதல் உள்ள சூழலில் மே 7ம் தேதி மதுக்கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் உள்ள வீடு முன்பு கே.எஸ். அழகிரி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்நிலையில் 5 பேருக்கு மேல் கூடியதாக கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 5 பேருக்கு மிகாமல், 15 நிமிடங்கள் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறியுள்ளார். வீடு அமைந்திருக்கும் பகுதி பிரதான சாலையாக இருப்பதால் வேடிக்கைப் பார்க்க சிலர் கூடியதாகவும், அதற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    மதுக்கடையில் 2 நாட்களாக முண்டியடித்துக்கொண்டு நின்றவர்கள் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள கே.எஸ்.அழகிரி தன் மீதான வழக்கைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு வழக்குப் பதியப்பட்டிருந்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

     
    Published by:Rizwan
    First published: