தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், கனிமொழி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பிரசாரம் தீவிரமாக இருந்தது.
இதற்கிடையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக கோயில்கள், மக்கள் கூடும் இடங்களில் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்னர், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் போட்டியிடும் கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளார். அவர்கள், பணம் இருந்தால் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் மத்தியில் எண்ணத்தை பரப்புகின்றனர். எனவே, இருவரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு, இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் தொடர்பாக, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை’ என்று தெரிவித்தார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள். ‘கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.