கோவில்பட்டி அருகே கார்கள் மோதல் - தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உயிரிழப்பு

ஆசிரியரின் கணவர் ஜெயவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 18, 2019, 7:51 AM IST
கோவில்பட்டி அருகே கார்கள் மோதல் - தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உயிரிழப்பு
ஆசிரியரின் கணவர் ஜெயவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.
Web Desk | news18
Updated: April 18, 2019, 7:51 AM IST
ராஜபாளையத்தை சேர்ந்த ஆசிரியை தேர்தல் பணிக்காக சென்றபோது  கோவில்பட்டி அருகே இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆசிரியை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சம்சிகாபுரத்தினைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி சங்கரகோமதி. இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கு அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் தேர்தல் பணி ஒதுக்கிடு செய்யப்பட்டு இருந்தது.

தேர்தல் பணிக்கு வருவதற்காக சங்கரகோமதி, தனது கணவர் ஜெயவேல் உடன் காரில் வந்துள்ளார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும், இவர்கள் வந்த காரும் எதிர்பாரதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்தில் சங்கரகோமதிஉயிரிழந்தார். ஜெயவேல் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று ஜெயவேலை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சங்கரகோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை  அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... கதையல்ல வரலாறு | தேர்தல்.. .சினிமா... அரசியல்...!


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...