ஊரடங்கால் வேலை இழந்து திருடனாக மாறிய தச்சு தொழிலாளி - ஒரே நாளில் சிக்கிய சம்பவம்

ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தச்சு தொழிலாளி திருடனாய் மாறி ஏடிஎம் மோசடியில் இறங்கி, அதை முறையாக செய்யத் தெரியாமல் ஒரே நாளில் சிக்கிய கைதாகியுள்ளார்.

ஊரடங்கால் வேலை இழந்து திருடனாக மாறிய தச்சு தொழிலாளி - ஒரே நாளில் சிக்கிய சம்பவம்
சரவணன்
  • Share this:
மதுரை மாவட்டம் பாலமேடு வலையபட்டி சாலையில் ஏடிஎம் உடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது.  பெரும்பாலும்  கிராமவாசிகளே அந்த பகுதி ஏடிஎம் வசதியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பாலமேடு பகுதியை சேர்ந்த சரவணன், தச்சுப்பணி செய்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடியுள்ளார்.

எப்படியாவது பணம் ஈட்ட வேண்டும் என்கிற வெறியில் தெரு தெருவாய் சுற்றியுள்ளார். அப்போது வலையபட்டி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு முதியவர்களும், கிராமவாசிகளும் பணம் எடுக்க வருவதும், அவர்களுக்கு அதை எடுக்கும் நடைமுறை தெரியாமல் இருப்பதையும் அறிந்த கொண்டார். இதைத் தொடர்ந்து போலி ஏடிஎம் கார்டுகளை தயார் செய்த சரவணன், ஏடிஎம் மையத்திற்கு வருவோரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி உதவியுள்ளார்.

பணத்தை எடுத்து தந்த பின், அவர்களின் ஏடிஎம் கார்டை வைத்துக் கொண்டு அதற்கு பதில் தான் தயாரித்த போலி கார்டுகளை கொடுத்துள்ளார். அவர்கள் சென்ற பின் அசல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவர்களது வங்கியிலிருந்து பணத்தை எடுத்துள்ளார். இதில் சோகமான விசயம், அங்கு வருவோரின் வங்கி கணக்கிலும் பெரிய அளவில் தொகை இல்லாமல் மிக சொற்ப அளவிலான தொகையே இருந்துள்ளது.


பத்திற்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்கை திருடி மொத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவரால் திருட முடிந்தது. உடனே தனது கடன்களை அடைத்துவிட்டு கொண்டாட்டமாக இருந்துள்ளார். அடுத்தடுத்து வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு எஸ்.எம்.எஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகியுள்ளனர். வங்கி மேலாளர் ஏடிஎம் சிசிடிவை சோதனையிட்ட போது அவர்களின் பணத்தை  சரவணன் திருடியது தெரியவந்தது.

உடனடியாக பாலமேடு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு சரவணன் கைது செய்யப்பட்டார். செலவழித்தது போக அவரிடம் இருந்து 28 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாடிக்கையாளர்களின் அதன் ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.




First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading