இனி அரசு ஊழியர்களுக்கு ஐ.டி கார்டு கட்டாயம்..!

அரசு ஊழியர்கள் பணிநேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இனி அரசு ஊழியர்களுக்கு ஐ.டி கார்டு கட்டாயம்..!
அரசு ஊழியர்கள் பணிநேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • Share this:
தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான அரசு அலுவலர்கள் பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாகவும், அது போன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை அணிவது தொடர்பாக துறை ரீதியான செயலாளர்களும் மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Also see:
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading