• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாமக்கல்லில் ஜாக்கிகள் மூலம் உயர்த்தப்பட்ட வீடு!

நாமக்கல்லில் ஜாக்கிகள் மூலம் உயர்த்தப்பட்ட வீடு!

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாமக்கல்லில் வீட்டை இடிக்காமல், அப்படியே பெயர்த்து ஜாக்கிகள் மூலம் 5 அடி உயரத்திற்கு, உயர்த்தப்படும் பணிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

    நகரமயமாதல் போன்ற காரணங்களால் வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிலர், கிடைக்கும் இடங்களில் வீடுகளை கட்டுவதால், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் நீர்புகுந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கட்டிய வீடுகளை இடிக்காமல், லாரி உள்ளிட்ட வாகனங்களைத் தூக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜாக்கிகள் மூலம், அப்படியே மேல் எழுப்பும் தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது.

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள கொங்குநகர் பகுதியில் வசித்து வரும் வீரமணி என்பவர், தனது வீட்டை 5 அடி உயரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 1982-ம் ஆண்டில், தனது பெற்றோர் வீடு கட்டியதாகவும், காங்கிரீட் சாலைகள் காரணமாக தற்போது தாழ்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜாக்கிகள் மூலம் வீட்டை அப்படியே உயர்த்த முடியும் என்ற தகவலை கேட்டு, அதை பின்பற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

    1400 சதுர அடி, 40 டன் எடை கொண்ட இந்த வீட்டை தரை மட்டத்தில் இருந்து, 5 அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் சுமார் 2 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைத்துள்ளனர்.

    260 ஜாக்கிகளைப் பயன்படுத்தி, தேவையான உயரத்திற்கு ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி, வீட்டை உயர்த்த உள்ளனர். இதையடுத்து, பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் கற்களை வைத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

    ஹரியானாவை சேர்ந்த தொழிலாளர்கள், ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து, பின்னர், அதை தேவையான அளவு உயர்த்தும் தொழில்நுட்ப முறையை,1991 முதல் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். சுமார் 5 மாடி கட்டடத்தை கூட, எந்தவித சேதமும் இன்றி, ஜாக்கிகள் மூலம் தேவையான அளவிற்கு உயர்த்த முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த தொழில்நுட்ப முறையை அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும், பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saravana Siddharth
    First published: