குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல செல்போன் விற்பனை உரிமையாளர் மகன் கைது!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல செல்போன் விற்பனை உரிமையாளர் மகன் கைது!
விபத்துக்குள்ளான சொகுசு கார்
  • News18
  • Last Updated: October 7, 2019, 4:22 PM IST
  • Share this:
சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பிரபல செல்போன் விற்பனை நிறுவன உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்த பரத் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு சாலையோர நடைபாதை மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரத் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் காவல்துறையினர் சொகுசு காரை பறிமுதல் செய்ததுடன், குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பிரபல செல்போன் விற்பனை நிறுவன உரிமையாளர் மகன் ஆரியாவை கைது செய்தனர்.


Also see:

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading